என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "குட்கா விற்பனை"
- 8, சிங்காரப்பேட்டையில் 9, மத்தூரில் 2, சாமல்பட்டியில் 1 கடைகள் என மொத்தம், 26 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
- குட்கா விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.
சிங்காரப்பேட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை போலீஸ் உட்கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்களை விற்ற 26 கடைகளுக்கு நேற்று சீல் வைக்கப்பட்டது.
ஊத்தங்கரை போலீஸ் டி.எஸ்.பி., பார்த்திபன் தலைமையில், போலீசார் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுடன் இணைந்து, ஊத்தங்கரையில் 6 கடைகளும், கல்லாவியில் 8, சிங்காரப்பேட்டையில் 9, மத்தூரில் 2, சாமல்பட்டியில் 1 கடைகள் என மொத்தம், 26 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
இதில், உணவு பாதுகாப்பு துறை ஆய்வாளர்கள் முத்துக்குமார், முத்து மாரியப்பன், ராஜசேகர், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஊத்தங்கரை கந்தவேல், சிங்காரப்பேட்டை சந்திரகுமார், மத்தூர் பாலமுருகன், கல்லாவி எஸ்.ஐ., அன்பழகன், ஊத்தங்கரை எஸ்.ஐ., கணேஷ்பாபு, மற்றும் போலீசார் பலர் கலந்து கொண்டு சீல் வைத்தனர்.
மேலும் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.
- மோட்டார் சைக்கிள் பறிமுதல் போலீசார் விசாரணை
- நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி செய்து தருமபுரி கிளை சிறையில் அடைத்தனர்.
பென்னாகரம்,
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள பளிஞ்சரஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி மகன் மோகன் (வயது 27).
இவர் பென்னாகரம் சுற்றுவட்டார பகுதி மளிகை கடைகளுக்கு மளிகை பொருட்களை 3 சக்கர ஆட்டோ மூலம் விற்பனை செய்து வருகிறார். இவர் சுற்று வட்டாரம் மளிகை கடைகளுக்கும் குட்கா உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களும் விற்பனை செய்வதாக பென்னாகரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
ரகசிய தகவலின் பெயரில் பென்னாகரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவக்குமார், கோவிந்தசாமி, கோவிந்தன் உள்ளிட்டோர் ரகசியமாக கண்காணித்தனர்.இதையறிந்த தலைமறைவாக மோகனை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.
அவரிடம் இருந்து குட்கா விற்பனைக்காக பயன்படுத்தி வந்த 3 சக்கர ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். கைதான மோகனை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி செய்து தருமபுரி கிளை சிறையில் அடைத்தனர்.
- பெட்டிக்கடை மற்றும் மளிகை கடைகளில் குட்கா விற்பனை செய்து வருவதாக சென்னை ஜெ.ஜெ. நகர் இன்ஸ்பெக்டர் சூரியலிங்கத்துக்கு ரகசிய தகவல் வந்தது.
- முகப்பேர் சீனிவாச குமார தெருவில் உள்ள ஒரு பெட்டிக்கடைக்கு குட்கா விற்பனை செய்வதற்காக வந்த நபரை போலீசார் மடக்கி பிடித்தனர்.
அம்பத்தூர்:
முகப்பேர் பகுதியில் உள்ள பெட்டிக்கடை மற்றும் மளிகை கடைகளில் குட்கா விற்பனை செய்து வருவதாக சென்னை ஜெ.ஜெ. நகர் இன்ஸ்பெக்டர் சூரியலிங்கத்துக்கு ரகசிய தகவல் வந்தது.
இதையடுத்து அவரது தலைமையில் போலீசார் முகப்பேர் பகுதியில் கண்காணித்து வந்தனர். அப்போது முகப்பேர் சீனிவாச குமார தெருவில் உள்ள ஒரு பெட்டிக்கடைக்கு குட்கா விற்பனை செய்வதற்காக வந்த நபரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர் கொண்டு வந்த பையை சோதனை செய்தபோது அதில் சுமார் 30 கிலோ குட்கா இருப்பது தெரிய வந்தது.
குட்கா விற்பனை செய்ய வந்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை செய்ததில் சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்த கண்ணன்(39) என்றும் முகப்பேர் பகுதியில் உள்ள பெட்டிக்கடை மற்றும் மளிகை கடைகளில் குட்கா விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. அவரிடம் இருந்து 30 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
- போலீசார் சோதனை செய்ததில் மீஞ்சூர் அடுத்த அரியன்வாயல் ரெயில்வே கேட் அருகே குடோனில் குட்கா பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது.
- குட்கா விற்பனை செய்த தவுலத் கானை கைது செய்து மீஞ்சூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பொன்னேரி:
மீஞ்சூர் அடுத்த அரியன்வாயல் பகுதியில் குடோனில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக ஆவடி காவல் ஆணையத்திற்கு தகவல் கிடைத்தது.
ஆவடி ஆணையர் சங்கர் உத்தரவின் படி இணை ஆணையர் விஜயகுமார் துணை ஆணையர் பாலகிருஷ்ணன் மேற்பார்வையில் காவல் உதவி ஆணையர் குமரேசன் தலைமையில் மீஞ்சூர் ஆய்வாளர் காளிராஜ் மற்றும் போலீசார் மீஞ்சூர் பகுதியில் தீவிர சோதனை செய்ததில் மீஞ்சூர் அடுத்த அரியன்வாயல் ரெயில்வே கேட் அருகே குடோனில் குட்கா பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது.
இது குறித்து விசாரித்த போது சென்னை ராயபுரம் பகுதியை சேர்ந்த தவ்லத் கான் மீஞ்சூர் குடோனில் பதுக்கி சுற்றுவட்டார பகுதியில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்வது தெரிய வந்தது.
பின்னர், குடோனில் பதுக்கி இருந்த ஒரு லட்சம் மதிப்பிலான பான் மசாலா குட்கா, புகையிலைபொருட்களை பறிமுதல் செய்து விற்பனை செய்த தவுலத் கானை கைது செய்து மீஞ்சூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- ரூ.2 ஆயிரம் மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல்
- போலீசார் விசாரணை
ராணிப்பேட்டை:
வாலாஜா நகரில் சில கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் போலீசார் பஸ் நிலைய பகுதியில் உள்ள ஒரு பங்க் கடையில் சோதனை நடத்தினர்.
சோதனையில் கடையில் ரூ.2 ஆயிரம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருப்பது தெரிய வந்தது அதை தொடர்ந்து போலீசார் குட்கா பொருட்களை பறிமுதல் செய்து கடை உரிமையாளர் சேட்டு என்பவர் மீது வழக்கு பதிவு செய்து, கடைக்கு சீல் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சித்தோடு போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய தலராமை தேடி வருகின்றனர்.
- குட்கா விற்பனையில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பவானி:
ஈரோடு மாவட்டம் சித்தோடு அடுத்த சமத்துவபுரம் மேடு பகுதியில் ஒரு குடோனில் தடை செய்யப்பட்ட போதை பொருளான குட்கா பதுக்கி வைத்திருப்பதாக சித்தோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சித்தோடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அப்போது குடோனில் வடமாநில வாலிபர் ஒருவர் காரில் சில மூட்டைகளை ஏற்றிக்கொண்டு இருந்தார். போலீசார் குடோனுக்குள் அதிரடியாக நுழைந்த போது அந்த வாலிபர் தப்பி ஓடிவிட்டார். போலீசார் அந்த காரை சோதனை செய்தபோது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மூட்டைகள் இருப்பது தெரியவந்தது. சுமார் 1000 கிலோ குட்கா அதாவது ஒரு டன் குட்கா இருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.1.50 லட்சமாகும்.
இதனையடுத்து சித்தோடு போலீசார் அந்த வடமாநில வாலிபர் குறித்து விசாரணை நடத்திய போது அவர் ஈரோடு பிருந்தா வீதியை சேர்ந்த தலராம் (35) என்பது தெரிய வந்தது.
இவர் கடந்த 2 மாதமாக இந்த பகுதியில் பழைய துணிகளை வியாபாரம் செய்வதாக கூறி குடோன் வாடகைக்கு எடுத்து குட்காவை பல்வேறு இடங்களில் இருந்து வாங்கி அதனை ஈரோடு மாவட்டம் முழுவதும் விற்பனைக்கு கொண்டு சென்றது தெரிய வந்தது.
இதனையடுத்து சித்தோடு போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய தலராமை தேடி வருகின்றனர். மேலும் 1000 கிலோ குட்கா, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
மேலும் குட்கா விற்பனையில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- டீக்கடை உரிமையாளர் செல்வேந்திரனை போலீசார் கைது செய்தனர்.
- கடையில் இருந்த தடை செய்யப்பட்ட 17.72 கிலோ குட்கா புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
வில்லிவாக்கம் நியூ ஆவடி சாலையில் உள்ள ஒரு டீக்கடையில் குட்கா புகையிலைப் பாக்கெட்டுகள் பதுக்கி வைத்து ரகசியமாக விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்தது.
இது தொடர்பாக டீக்கடை உரிமையாளர் செல்வேந்திரனை போலீசார் கைது செய்தனர். கடையில் இருந்த தடை செய்யப்பட்ட 17.72 கிலோ குட்கா புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
- தூத்தாரிபாளையத்தில் சத்தியநாதன் ( 30) என்பவர் கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டார்.
- 25 பாக்கெட்டுகள் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள கேத்தனூரில் செல்வராஜ் (வயது 50) என்பவரது மளிகை கடையில் காமநாயக்கன்பாளையம் போலீசார் சோதனை மேற்கொண்டதில் 7 பாக்கெட் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அதுபோல் மானாசிபாளையத்தில் உள்ள பூபாலன் (55 ) என்பவரது கடையில் இருந்து 7 பாக்கெட்களும், கிருஷ்ணாபுரத்தில் உள்ள மணிகண்டன்(26) என்பவரது மளிகை கடையில் இருந்து 10 பாக்கெட்டுகளும் என மொத்தம் 25 பாக்கெட்டுகள் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டனர்.
அது போல் பொங்கலூரை அடுத்த வெள்ள நத்தம் பகுதியை சேர்ந்த பழனிசாமி (52) என்பவரது தோட்டத்தில் கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்று பார்த்ததில் அவர் வைத்திருந்த 5 லிட்டர் கள்ளை பறிமுதல் செய்தனர். அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். அதுபோல் தூத்தாரிபாளையத்தில் சத்தியநாதன் ( 30) என்பவர் கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டார்.
அவரிடம் இருந்து 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கேத்தனூரில் அழகு ராஜா என்பவரிடமிருந்து 10 மது பாட்டில்களும், சந்தமநாயக்கன் பாளையம் முருகேசன்(50) என்பவரிடமிருந்து 7 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
- சென்னையில் கடைகளில் குட்கா மற்றும் புகையிலை விற்பனை அதிகரித்து வருகிறது.
- குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பொதுமக்களின் உடலுக்கு தீங்கு விளைவிப்பவை.
சென்னை:
தமிழகத்தில் கடந்த 2013-ம் ஆண்டு குட்கா விற்பனை தடை செய்யப்பட்டது. பின்னர் ஆண்டுதோறும் இந்த தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது.
தடையை மீறி விற்பவர்கள் மீது உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இருப்பினும் சென்னையில் கடைகளில் குட்கா மற்றும் புகையிலை விற்பனை அதிகரித்து வருகிறது. இதை தடுப்பதற்காக புதிய சட்டம் விரைவில் வரவிருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
இது தொடர்பாக கோவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-
இதுவரை உணவு பாதுகாப்பு துறை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பொதுமக்களின் உடலுக்கு தீங்கு விளைவிப்பவை. எனவே கடை வியாபாரிகள் இந்த பொருட்கள் விற்பனையை தவிர்க்க வேண்டும்.
குட்கா விற்பனையை தடுக்க தேவைப்பட்டால் கூடுதல் சட்டங்கள் கொண்டு வரப்பட்டு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் என்றார்.
- போலீசார் சோதனையில் சிக்கினர்
- 12 மூட்டைகள் பறிமுதல்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்டம் எஸ்பி தனிப்படை போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது உமராபாத் போலீஸ் நிலையத்தின் அருகில் உள்ள மளிகைக் கடையில் சோதனை நடத்தினர்.
அங்கிருந்து 12 மூட்டை குட்கா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.50 ஆயிரம் ஆகும். இதையடுத்து கடைகாரரை போலீசார் கைது செய்தனர். கைது செய்த எஸ்பி தனிப்படை போலீசார் உமராபாத் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அதை தொடர்ந்து ஆம்பூர் கஸ்பா பகுதியில் பைக்கில் வந்த ஒருவரை நிறுத்தி சோதனை செய்தனர். அவரிடம் இருந்து 5 கிலோ குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி, சப் இன்ஸ்பெக்டர் கணேஷ் மற்றும் போலீசார் திருவள்ளூர் பஸ் நிறுத்தத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- காக்களூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த சர்தார் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி, சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ் மற்றும் போலீசார் திருவள்ளூர் பஸ் நிறுத்தத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது திருவள்ளூர் பஸ் நிலையம் அருகே இருந்த பீடா கடையில் தடைசெய்யப்பட்ட குட்கா, புகையிலை விற்பது தெரிந்தது.
இதையடுத்து காக்களூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த சர்தார் என்பவரை போலீசார் கைது செய்தனர். கடையில் இருந்த ரூ.20 ஆயிரம் மதிப்பிலான குட்கா, புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது.
- தங்கதுரை, மணிராஜனை போலீசார் கைது செய்தனர்.
- குட்கா எப்படி கிடைக்கிறது? எங்கிருந்து கடத்தி வரப்படுகிறது? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வண்டலூர்:
ஊரப்பாக்கம், ரேவதிபுரத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை விற்பனையில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த தங்கதுரை, மணி ராஜன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து குட்கா, கார் பறிமுதல் செய்யப்பட்டது.
அவர்களுக்கு குட்கா எப்படி கிடைக்கிறது? எங்கிருந்து கடத்தி வரப்படுகிறது? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்